திராவிட மாடல் பொருளாதாரம்

அரசியல் பொருளாதாரம் பற்றி எதுவுமே தெரியாதவர்கள் கூட @ptrmaduraiஅவர்களின் பேட்டியையும் பேராசியரியர் ஜெயரஞ்சன் அவர்களின் பேட்டியையும் பார்த்தால் நிறைய கற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக பட்ஜெட் பற்றி. நேற்றைய Mirror Now பேட்டியில் PTR அவர்கள் capital expenditure மிக அழகாக விளக்கியிருப்பார்.

பட்ஜெட்டில் வரி வருவாய் உள்ளிட்டவற்றை வருமானமாக வகைப்படுத்தினால், ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றை செலவினங்களாக வகைப்படுத்துவார்கள். இதில் புதிதாக கட்டிடம் கட்டுவது, பாலங்கள் அமைப்பது போன்றவற்றை முதலீட்டு செலவினங்களாக வகைப்படுத்துவார்கள். ஆனால் மனிதர்களுக்காக அதாவது மனிதவளங்களை மேம்படுத்த செய்யும் செலவினங்களை accountingல் முதலீடாக கருதுவதில்லை. மாறாக அவை செலவாகவே வகைப்படுத்தப்படுகின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் மக்களிடமும் முதலீடு செய்திருக்கிறோம். அதனால்தான் இன்று இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களில் மிக குறைந்த அளவு இருக்கும் பெரிய மாநிலமாக இருக்கிறோம்.

நாம் மனிதவளங்களில் செய்த முதலீடுதான் இன்று இந்தியாவில் மிக அதிகமான higher education enrolment ratio உள்ள மாநிலமாக இருக்கிறோம். இந்த முட்டாள்கள் இலவசம் என்கிற வார்த்தையை பயன்படுத்துவதே தவறு என்கிறார். திராவிடப் பொருளாதார மாடல் உலகிற்கே வழிகாட்டியாக மாறும். வளரும் நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளும் திராவிடப் பொருளாதார மாடலை பின்பற்றத்தொடங்கும்.

 

YouTube player

1 thought on “திராவிட மாடல் பொருளாதாரம்

Comments are closed.